ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Monday, February 02, 2004

மீண்டும்

நீண்டடடடடடநாட்களின் பின் இதற்குள் நுழைந்துள்ளேன்.அதற்குள் பல விடயங்கள் நாட்பட்டுவிட்டன..அரதப்பழசாகிவிட்டது என்று கூட சொல்லலாம் .உதாரணமாக இந்த தானிறங்்கி எழுத்துரு விடயம்.
இது பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு புத்தகம் போடுமளவிற்கு விடயம் இருக்கிறது.இருந்தும் அவ்வளவற்றையும்்இப்போது உமர் 4 வரிகளுக்குள் அடக்கிவிட்டார்.

இன்னும் விளக்கமாக சொல்லப்போனால்..இதன் தத்துவமே இந்த தானீறங்கி எழுத்துருவை அமைக்கும்போது
நீ இந்த இந்த வீடுகளுக்கு மட்டும்தான் போகலாம் என்று கண்டிப்பாக சொல்லிவிடவேண்டும்.எனவே அந்த
எழுத்துருவை வேறு ஒருவர் இலகுவாகப் பாவிக்கமுடியாது.அப்படி அவர் பாவிப்பதானால் அவார் தனக்கென்று தனீயாக
ஒரு தானிறங்கி எழுத்துரு சேய்யவேண்டும்.

ஒரு இணையத்திற்கு புதியவராயின் இந்தவிடயம் சிதம்பர சக்கரம் பார்த்ததுபோலவே இருக்கும்.இவர் அவரிடம் கேட்டு
அவர் இவரிடம் சொல்ல சில புரிந்து பல புரியாமலிருக்க மீண்டும் சிதம்பரம்தான்.

இந்த பிரச்சனைகளை உமர் ஒரு குறுக்குவழி மூலம் தீர்த்துள்ளார்.அதுவும் யூனிக்கோட் வகைக்கு மட்டுமே செய்துள்ளாாார் என்பதுவும் ஒரு நற்செய்தி.இதன் மூலம் யூனிக்கோட் தளங்கள்பெருக ஒரு வசதி

இனி சிறிய விபரணம் ஒன்று

உங்கள் தளங்களில் இதை பொருத்த உமரின் தேனீ thenee.eot என்ற கோப்பை அல்லது எழுத்துருவை ஏதாவது ஒரு
தளத்தீல் ஏற்றவேண்டும்.அல்லது அது ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ள ஒரு முகவரியை உங்கள் தொடுப்பாக கொடுக்கவேண்டும்.



உதாரணமாக<style type="text/css">

@font-face {

font-family: TheneeUniTx;

font-style: normal;

font-size: 9pt;

font-weight: normal;

src: url(http://www.suratha.com/THENEE.eot);

}

-->

</STYLE>


பின்னர் நீங்கள் எழுதும் யூனிக்கோட் எழுத்துருவகையை குறிப்பிடும்போது அதில் TheneeUniTx என்ற எழுத்துருவின் பெயரும் இருத்தல் வேண்டும்.

உதாரணம்
body{margin:0px 0px 0px 0px;font-family:"TheneeUniTx,Latha,aAvarangal,
TAU_1_ELANGO_Barathi,TSCu_InaiMathi,TSCu_ArulMathi,
TSCu_InaiKathir,InaiKathir_Unicode,Code2000,InaiMathi_Unicode
,InaiKathir_Unicode,Latha,Arial Unicode MS"}


அதன் பின் உங்கள் இணையப்பக்கத்தை ஒருவர் சிதம்பரத்திலோ அல்லது சிக்காக்கோவிலோ இருந்துகூட
தமிழில் எந்தவொரு எழுத்துருவுமில்லாது படிக்கலாம்.


முடிந்தால் உங்கள ் இணையப்பக்கம்பற்றி உமருக்கு ஒரு வரி எழுதிவிடுங்கள்.