பல வலைப்பதிவுகளின் புதுப்பித்தலை தேடி தேடி களைத்ததின் விளைவாகவும் புதியவையை அறிமுகப்படுத்தும் நோக்கமாகவும் எழுந்ததே இந்த ஊருலா வலைக்குடிலாகும்.
இதனை வலப்பதிவுகளின் எண்ணிக்கைக்கேற்றவாறு தற்சமயம் மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளேன்
அவ்வப்போது சிலர் வலைப்பதிவுகளை புதிப்பிக்காது விடும்பட்சத்தில் அவை நீக்கப்பட்டும் புதியவர்கள் வரும்போது அந்தப்பதிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுக்கொண்டுமிருக்கும்
புதியவர்கள் தமது வரவு இதனுள் சேர்க்கப்படாது இருந்தால் தெரியப்படுத்தவும்.
நிறையிருந்தால் நண்பர்களிடமும் குறையிருந்தால் என்னிடமும் தெரிவியுங்கள்.
அன்புடன்
1 Comments:
At 8:56 AM ,
மு. மயூரன் said...
மிக நல்ல முயற்சி.
அண்மையில் வலைக்குறிப்புக்களுக்கான விபரக்கொத்து அமைக்கப்படவேண்டிய தேவை பற்றி எழுதியிருந்தேன்.
வலைக்குறிப்புக்களைப்பொறுத்தவரையில் ஒருவர் பல துறைசார் விடயங்களையும் குறிப்பிடுவதால் விபரக்கொத்து அமைப்பதற்கு பெரும் உழைப்பு தேவைப்படும். அதற்கு முன் இப்படியான முயற்சி மிகவும் பிரயோசனமானது.
ஒரே பார்வையில் அத்தனை புதிதுசேர்ப்புக்களையும் பார்க்கக்கூடியதாக இருப்பது மிகச்சிறப்பு.
சில ஆலோசனைகளை கூறலாம்.
1. பக்கங்கள் இறங்க நேரமாகிறது. முதல் பக்கத்தில் தமிழ் அகரவரிசை ஒழுங்கையும்(link) அதை சொடுக்கி விபரங்களுள்ளபக்கங்களுக்கு செல்லக்கூடியதாஅவும் செய்யலாம்.
2. கூடுமானவரை இடச்சிக்கனத்தை பயன்படுத்தி, எழுத்துருக்கள், இடைவெளிகள் ஆகியவற்றைக்குறைத்து, ஒரேபார்வையில் பல தகவல்களைப் பெறக்கூடியவாறு செய்யலாம்.
மிகச் சிறந்த முயற்சி. மிக பிரயோசனமானது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home