எழுநா -பின்னூட்டத்திரட்டி
ஒரே இடத்திலிருந்து அனைவரது பதிவுகளிற்கும் வரும் பின்னூட்டங்களை
பார்வையிடலாம்.
தமிழ்மணத்துக்கோ தேன்கூட்டுக்கோ பாதிப்பில்லை.
பட்டை(Badge) தாரை தம்பட்டை ஒன்றும் உங்கள் பக்கத்தில் சேர்க்கத்தேவையில்லை .
கூகிள் ஆண்டவரே திரட்டுவதால் யார் வந்தார்கள் யார் போனார்கள் என்ற ஒரு
விபரமும் யாருக்கும் தெரியவராது.
அடி முடி தேடுவதுபொல் கடந்தகாலப்பின்னூட்டங்களையும் பின் வரிசையாகச்சென்று தேடலாம்.
தமிழ்மணத்திலோ அல்லது தேன்கூட்டிலோ அல்லது இரண்டிலும் இணைந்தவர்களோ இணையாதவர்களோ தமது பதிவின் பினனூட்ட திரட்டியை இதில் பார்க்கலாம்.
பலவீனம்
கூகிள் மூலம் இயங்கப்பண்ணுவதால் அது 5 நிமிடத்திற்கோ அல்லது அரை
மணித்தியால இடைவெளியிலோ திரட்டுவதைத்தான் பார்த்துக்கொள்ளமுடியும்.
பின்னூட்ட திரட்டி வசதி கொண்ட வலைப்பதிவுகளை மட்டும்தான் இதில் சேர்க்கமுடியும்.உதாரணமாக புதிய புளொக்கர் கணக்கு; வேர்ட்பிறஸ் போன்றவை.
தங்களது பின்னூட்டம் திரட்டப்படவில்லை என கருதுபவர்கள் பின்னூட்டத்தில் தங்கள்
தள முகவரியை கொடுக்கவும்.சேர்த்துக்கொள்வேன்.
இது உங்களுக்கு பயன்படுமாயின் இதற்கு ஒரு தொடுப்பு உங்கள் பக்கத்தில் தெரிவித்து மற்ற புதியவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
பி.கு
எழுநா என்ற தனது இணையத்தள பெயரை பாவிக்க அனுமதி தந்த சயந்தனுக்கு நன்றி.
எழுநா -பின்னூட்டத்திரட்டி
10 Comments:
At 6:08 AM ,
அ. இரவிசங்கர் | A. Ravishankar said...
எழுநா என்றால் என்ன பொருள்? இதில் எத்தனைப் பதிவுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன?
At 6:46 AM ,
suratha yarlvanan said...
அதிகம் பேசாதே என்பதற்கு நாவடக்கம் வேணுமென்பார்கள்.பின்னூட்டம் இடுவது என்பது
கருத்தை சுதந்திரமாக கூறுவது.எனவே மௌனத்திற்கு எதிர்ச்சொல்லாக இந்த எழு நா பொருத்தமாக இருக்குமென நினைத்தேன்.
பின்னர் சயந்தன் எழுநா என்றால் நெருப்பென அர்த்தம் என்றார்.சில பின்னூட்டங்கள் நெருப்பாகத்தானே இருக்கின்றது:)
ஒரு தோராயமாக அடிக்கடி பதிபவர்களின் பின்னூட்டம்தான் தற்சமயம் திரட்டப்படுகிறது.நாளுககு நாள் புதிதாகவும் சேர்க்கிறேன்.
At 7:54 AM ,
அ. இரவிசங்கர் | A. Ravishankar said...
விளக்கத்துக்கு நன்றி
At 3:35 PM ,
அ. இரவிசங்கர் | A. Ravishankar said...
சுரதா - இது மனித உழைப்பில் தொகுக்கப்படும் பின்னூட்டத் திரட்டி என்பதால் உங்கள் உழைப்பு வெகுவாகத் தேவைப்படுமே? இது அவசியம் தானா? இத்திரட்டி உண்மையில் பயனுடையதாக இருக்குமா? கடைசி 20 பின்னூட்டங்களைத் தான் கூகுள் திரட்டிகள் தரும் என்று நினைக்கிறேன்..இல்லை, ஒரு எடுத்துக்காட்டுக்கு இதை செய்து காட்டி இருக்கிறீர்கள் என்றால் சரி.
At 10:19 PM ,
பொன்ஸ்~~Poorna said...
சுரதா,
எழுநாவின் OPML கோப்பைப் பகிர முடியுமா?
At 12:25 AM ,
suratha yarlvanan said...
பொன்ஸ்,
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுகிறேன்.இன்னும் ஒரு சில சேர்க்க இருக்கிறது.
At 12:36 AM ,
Anonymous said...
தமிழ்வெளியின் அட்மின் பொன்ஸ் என்கிற பூர்ணாவுக்கு அந்த கோப்பை அனுப்பி வையுங்கள் சுரதா.
சென்னைப்பட்டிணம் நண்பர்கள்.
At 2:39 AM ,
suratha yarlvanan said...
நன்றி ரவி பின்னூட்டத்திற்கு
இதில் மனித உழைப்பு மிக குறைவு..ஆணையை மட்டும் நான் இடுகிறேன் .கூகிள் வேலைக்காரன் தனது பணியை செவ்வனவே செய்வான்.இதுதான் அதனது பலம்.
20 திரட்டுக்கள் மட்டுமல்ல பின்னோக்கி பின்னோக்கி நேற்றைய முந்தைய தினத்து பின்னோட்டங்களெல்லாம் பார்த்துக்கொண்டே போகலாம்.
கூகிள் பக்கமானதால் எனக்கு சேர்வர் வழங்கி லோட் அது இது என தனிப்பட்ட அழுத்தங்கள் எதுவும் இல்லை.
இது ஒரு எடுத்துக்காட்டாகக்கூட மற்றைய திரட்டும் தளங்களுக்கு அமைந்தால் சந்தோஸமே..
இன்னம் பல அனுகூலங்கள் உண்டு. அதனை மேலே தெரிவித்துள்ளேன். புதிதாக இணைய விரும்புபவர்கள் தங்களது முகவரியை பின்னூட்டமாக கொடுத்தால் இதில் இணைத்துவிடுவேன்.
At 4:43 AM ,
அ. இரவிசங்கர் | A. Ravishankar said...
திரட்டுவது தானியக்கம் என்று அறிவேன்..ஆனால், நீங்கள் மனித முறையில் தானே புது url முகவரிகளைச் சேர்த்துக் கொள்கிறீர்கள்..அதையே வீண் என்று கருதினேன்..2000+ பதிவுகளுக்கு இப்படி சேர்ப்பது தேவையா?
பிறகு, OPML கோப்பை பொதுவில் வைத்தால், அவரவர் தரவிறக்கி தங்களுக்குத் தேவையில்லாத பதிவுகளை நீக்கிக் கொள்ளலாமே?
At 12:40 AM ,
innaiyaveli.blogspot.in said...
I have accidentally come across your blog while I was browsing something else. The job you are doing is good. Congrats.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home