தமிழ்மணம் வாசிப்பில் . . .
தமிழ்மண வாசிப்பில் பூங்காவிற்காக கடந்தவார பதிவுகளில் எனை கவர்ந்த பதிவுகள் பற்றிய பதிவு இது.
தமிழ்மணத்தில் உலாவும்போது எதேச்சையாக ஒரு சில பதிவுகள் எம்மை கவர்ந்திழுக்கும். அதற்குக் காரணமாக சில சமயம் பதிவுகளின் தலைப்புக்கள் அல்லது பதிவை எழுதிய, அறிந்த, நண்பர்கள் அல்லது சமீபகால சர்ச்சைக்குரிய செய்திகள் என்று ஏதோ ஒரு காரணம் இருக்கும். .அப்படி எதேச்சையாக பார்த்த கவர்ந்த சில பதிவுகள் பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.
நீங்களே நேரில் படித்து பார்க்கவேண்டும் என்பதற்காக எனது தெரிவைப்பற்றி நான் அதிகம் நீட்டி முழக்கவில்லை.நீங்களே படித்து பாருங்கள்; முடிந்தால் அவர்களுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிடுங்கள்.
1.இந்தியாவில் கேரளாவில் குடியேறிய யூத மக்களைப்பற்றிய கானா பிரபாவின் ஒரு கட்டுரை.
http://ulaathal.blogspot.com/2007/06/blog-post.html
ஆதாரமாக வரலாற்று விபரங்களையும் தான் சுற்றுப்பயணத்தின் போது கண்ட விபரங்களையும் கூறியிருக்கிறார்.
அண்மையில் இந்தியாவில் இன்னொரு மாநிலத்திலிருந்து(பெயர் மறந்துவிட்டது) யூத இனத்தினரை பலவித இழுத்தடிப்புகளுக்குப் பிறகு இஸ்ரேல் தமது நாட்டுக்கு அழைத்து கொண்டதாக வாசித்திருந்தேன்.
பாண்டிச்சேரி தமிழர்கள் பலருக்கு ப்ரான்ஸ் குடியுரிமை இருப்பதுபோல், கேரளா யூதர்களுக்கும் இப்படி ஏதாவது ஏதாவது வசதி இருக்கிறதா தெரியவில்லை.
2.காவல்துறையினரோடு ஓர் அனுபவம்
http://dharumi.blogspot.com/2007/06/224.html
தமிழகக்காவல்துறை பல சாதனைகளை செய்திருந்தாலும், எப்போதும் தினசரியாகவிருக்கட்டும் திரைப்படமாகவிருக்கட்டும் தாக்குதலுக்குள்ளாகிக்கொண்டே இருக்கும்.
திறமையானவர்களை ஊக்குவித்து ஒரு நேர்முகம் தொலைக்காட்சியில் காண்பிப்பதோ அரிதிலும் அரிது.
அதனால் சற்று வித்தியாசமாக இந்தக் கட்டுரை எனது கண்ணில் பட்டது.
இந்தப்பதிவில் ஒரு பொதுமகனாக பொறுப்புணர்ச்சியுடன் ஒரு வலைப்பதிவரும், அதை அக்கறையுடன் காது கொடுத்துக் கேட்டு, செயல்படுத்திய காவல்துறையும் சற்று வித்தியாசமாக இருந்தது.
வலைப்பதிவைத் தருமி சரியாகவே பயன்படுத்துகிறார்.
3. http://masivakumar.blogspot.com/2006/06/blog-post_21.html
மிகப் பிரயோசனமான கட்டுரை.ப்அகலக்கால் வைக்க விரும்புவோருக்கான சிவகுமாரின் அனுபவரீதியான கட்டுரை. படிக்கவேண்டியதொன்று.
இங்கு இடப்பட்டுள்ள பின்னூட்டம் கூட சுவாராஸ்யமானது.
4. http://wandererwaves.blogspot.com/2007/06/6.html
சில வலைப்பதிவுகள் மாம்பழசீசன் பலாப்பழசீசன் என்பது போல சில சீசன் பதிவுகளைத்தாங்கிவரும்.அந்த சமயத்தில் அது குறித்து பலரும் பலவிதகோணங்களில் எழுதுவார்கள். தற்சமயம் சிவாஜி சீசன்.
எனக்கு பிடித்த நவரசநாயகன் பெயரிலியும் இது குறித்து ஒரு கட்டுரை வரைந்துள்ளார். இவரது கட்டுரைகளில் கோபம் நக்கல் நையாண்டி அதனுடன் தமிழும் சேர்ந்து விளையாடும் என்பது தனிச்சிறப்பு.
5.மெட்டி ஒலி" என்றொரு மூணரை வருட அவஸ்தை .
http://ssankar.blogspot.com/2005/06/blog-post.html
யதார்த்தத்தை வெளிப்படுத்திய ஒரு கட்டுரை.நானும் எங்கள் வீட்டில் அரசிக்கு அடிமை. இணையத்தில் எப்படியும் கலைத்துப்பிடித்து பார்த்துவிடுவேன்.
அதிக ஓவர் சென்டிமன்டல் இல்லாதிருப்பதும் ராதிகாவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சீரியல் என்றொரு அவஸ்தை ஒரு புறமிருந்தாலும் ஒரு சில தனித்து வாழும் முதியவர்களுக்கு அது ஒரு பேச்சுத்துணையாகவிருப்பதைப் பல குடும்பங்களில் கண்டிருக்கிறேன்.
6.ஆறினால் அந்த சினம் பயன்படுமா ?
http://naachiyaar.blogspot.com/2007/06/blog-post_20.html
மிக நகைச்சுவையாகவும் அதே ரீதியில் அனுபவரீதியிலும் வல்லிசிம்ஹன் எழுதியுள்ளார் .பதிவின் முடிவில் அவர் எழுதிய, " நாளைக்கு மிச்ச கோபம் பார்க்கலாம்" என்ற வரி பதிவிற்கு மேலும் தனிச்சிறப்பை கொடுத்துள்ளது.
7.எங்கள் வீட்டில் அடிக்கடி நெட்டுரு போடப்படும் மந்திரம்.
http://reallogic.org/thenthuli/?p=230
அதனால் இந்தக் கட்டுரையின் அருமை சட்டென்று புரிந்தது.நன்றி பத்மா அர்விந்த்.
8. http://thoduvanamnamullathil.blogspot.com/2007/06/blog-post_22.html
மழையை ரசிக்க வாயேன்
//ரெண்டு நாளாவே இங்கே பங்களூர்லே மப்பும் பந்தாரமுமா இருக்கு. ராத்திரியெல்லாம் ஜோறா மழை கொட்டோக்கொட்டுன்னு//
இப்படி ஆரம்பிக்கும்போதே கட்டுரையை முழுதாக படிக்க ஒரு ஆர்வம் தோன்றுகிறது.
மழையை ரசிக்காதோர் உண்டா?மிக அனுபவபூர்வமாகவும் யதார்த்தமாகவும் தீபா எழுதியுள்ளார்.
9.இராஜஇராஜ சோழன் பற்றிய ஒரு பயணப்பதிவு.பல விபரங்களை கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள்.
http://yaathirigan.blogspot.com/2007/05/blog-post_8257.html
10.சிவாஜி - ஒரு தமிழ்த்துவ ஆய்வு.
http://padamkaadal.blogspot.com/2007/06/blog-post_19.html
தமிழில் நையாண்டி ரீதியிலான கட்டுரைகள் வரவு குறைவே.சோ மட்டுமே இதில் முன்னர் கோலாச்சிகொண்டிருந்தார்.
இப்போது வலைப்பதிவு வந்தபின்னர் 'இது' போலவே நிறையவே வருகின்றது.படித்துப்பாருங்கள்.
11.சினிமா டிரெயிலர்கள் சொல்லும் வாழ்க்கை தத்துவங்கள்..நல்லதொரு வாழ்க்கைத் தத்துவக்கட்டுரை. துணிந்து ஒப்பிட்டு எழுதியுள்ளார்.
http://nunippul.blogspot.com/2007/06/blog-post_14.html
12.எனக்கு பிடித்த வலைப்பதிவாளர். சீரியஸான விடயத்தை நகைச்சுவையாகவும் நகைச்சுவையை சீரியஸாகவும் சொல்வார் :)
இவரது இந்தக் கட்டுரை, யுத்தமற்ற சூழல்
http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_19.html
பற்றிப் பேசுகிறது; பதிவு செய்கிறது .
அனுபவித்தவர்களுக்குத்தான் யுத்தமும் அதன் வலியும் புரியும்.இழந்த காலங்கள் இழந்ததுதான்!
ஒரே ஒரு முறைதான் மண்ணில் வாழ்க்கை.அதனையும் இந்த மண்ணுக்காக யுத்த வனத்தில் தொலைத்துவிட்டு நடைப்பிணமாக எத்தனை பேர்?
புலத்திற்கும் கலைத்துவரும் இந்த யுத்தவாடையில் தம்மைத் தொலைத்தவர்கள் எத்தனை பேர்?
எனது நண்பர் ஒருவர் வீட்டில் செல் விழுந்து குடும்பத்தினர் அனைவரும் இறந்தார்கள்.புலத்தில் இருந்ததனால் அவர் மட்டும்தான் தப்பினார்.
அவர் செய்தி கிடைத்ததும் "எங்கடை வீட்டிலை மட்டும்தானா தமிழீழம் கேட்டார்கள்" என்று அழுதபடி என்னிடம் கேட்டதை, அந்த முகத்தை, இனி நான் ஆயுளுக்கும் மறக்கமுடியாது. இழந்தது இழந்ததுதான்.
யுத்தம் நாளை தீரும்.
அரசுகள் கை குலுக்கி கொள்வார்கள்.
இழந்த இழப்புக்களுக்காக வருத்தம் மட்டும் தெரிவிப்பார்கள்.
இதுவே நியதியாகும்.
அடுத்த தலைமுறை நகரும்.
வலைப்பதிவில் தரமான கட்டுரைகள் என்று பலவிருந்தாலும் வலைப்பதிவு என்று வரும்போது அந்த அந்த நேரத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை, கொந்தளிப்பை வெளிப்படுத்தும் பதிவுகள்தான் என்னை அதிகம் கவர்ந்தவை. அந்த ரீதியிலேயே இவை என்னை ஈர்க்க காரணமாகவிருந்தன.

7 Comments:
At 2:26 AM ,
selventhiran said...
இதுமாதிரியான வெளிப்படை பாராட்டுகள் பதிவர்களை உற்சாகப்படுத்துவதுடன், என்னைப்போன்றவர்கள் தேடிப்பிடித்து படிக்கவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் தாங்கள் சிபாரிசு செய்த பத்தும் சோடை போகவில்லை.
செல்வேந்திரன்
At 4:49 AM ,
Deepa said...
உங்க பாராட்டை இன்னிக்கி தான் பார்த்தேன்.. ரொம நன்றி..இந்த மாதிரி பாராட்டு தான் என்னை போல் உள்ளவங்களுக்கு டாணிக்..நன்றி
At 6:48 AM ,
-/பெயரிலி. said...
/அண்மையில் இந்தியாவில் இன்னொரு மாநிலத்திலிருந்து(பெயர் மறந்துவிட்டது) யூத இனத்தினரை பலவித இழுத்தடிப்புகளுக்குப் பிறகு இஸ்ரேல் தமது நாட்டுக்கு அழைத்து கொண்டதாக வாசித்திருந்தேன். /
மணிப்பூர் என்று ஞாபகம். தொலைந்துபோன ஒரு யூத இனமென்று "சேர்த்துக்கொண்டிருக்கின்றார்கள்."
இது பற்றி ஓர் ஐந்தாறு ஆண்டு காலத்துக்கு முன்னால் A & E அலைவரிசையிலே "வரலாறு" விவரணமா, பரப்புரையா என்ற பேதமில்லாமலே சொல்லப்பட்டது
At 8:00 AM ,
வல்லிசிம்ஹன் said...
பாராட்டுக்கு மிக நன்றி சுரதா.
தகவல் கொடுத்ததற்கும்தான்.
இணைப்பப் பார்த்து வேறு யாரும் படித்து ரசித்தால் எனக்கு சந்தோஷம்தான்.
மற்ற ஒன்பது பதிவுகளையும் லின்க் கொடுத்ததும் நல்லது.
பாதி சமயம் இணையத்துக்கு வரும்போது மேல்நொக்காகப் பார்த்துவிட்டு,
நேரம் இல்லாத காரணத்தால் வெளியில் வரும் வழக்கம் இன்று மாறியது.நன்றி.
At 8:46 AM ,
ramachandranusha(உஷா) said...
அன்புள்ள சுரதா,
மனமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு தாங்கள் உருவாக்கிய பொங்கு தமிழை நாளும் இலவசமாய் பாவிக்கும் ,
உஷா
At 3:36 PM ,
கானா பிரபா said...
வணக்கம் சுரதா
உங்களைப் போன்றவர்களின் உற்சாகப்படுத்தல் என்னை மேலும் எழுதத் தூண்டுகின்றது, மிக்க நன்றிகள்.
At 4:23 PM ,
வெற்றி said...
சுரதா,
பதிவுகளை அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவுகளில் கானா பிரபாவின் பதிவை மட்டும் தான் வாசித்திருக்கிறேன். மற்றையவை கண்ணில் படவில்லை. விடுபட்ட பதிவுகளைத் தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home