தந்திரமாவது நீறு
RSS/XML அல்லது ஓடை என்பவற்றை உருவாக்கி அதனை மிக இலகுவாக எப்படி பாவனைக்கு விடுவது?இந்த RSS அடக்குவதற்கு சில சட்டதிட்டங்கள் உண்டு.அதனை அறிந்தால் அதன்பின்னர் சேமிப்பில்ஏற்ற சொந்த வழங்கி தேவை...இவையொன்றும் இல்லாமல் மிகச்சுலபமாக இதுபற்றி அறிந்திராத எவரும் இதனை தங்களது கட்டுக்குள் கொண்டுவரலாம்.
1.ஏதாவது ஒரு Blogger கணக்கு ஆரம்பியுங்கள்(உதாரணம் thinnai)
2.

3.அதன்பின் title கீழ் உள்ள பெட்டியில் (body) அந்த நிஜமான போகி என்ற கட்டுரை அல்லது கவிதை சொல்லும் முதல் பகுதியை சேர்க்கவேண்டும்.
4.இனி வழமைபோல் Publish Post என்பதை அழுத்த காரியம் முடிந்தது.அவ்வளவுதான்.
இப்படி ஒரு தலையங்கத்திற்கு செய்ததுபோல மற்றைய முக்கிய தலையங்கங்களுக்கும் இதே முறையில் செய்ய சரி.
5.உங்கள் RSS முகவரி அதன் பின் இப்படி தோற்றமளிக்கும
http://உதாரணம்.blogspot.com/atom.xml
இதே போல் ஒரு இலக்கியதளத்தின் முக்கிய பகுதிகளை யாராவது சேவை நோக்கில் செய்தால் தமிழுக்கும் யூனிக்கோட்டுக்கும் புண்ணியம் உண்டாகும்.
எதிர்பார்க்கப்படும் தளங்களின் rss ஓடைகள்
திண்ணை,தற்ஸ்ரமில்கொம்,புதினம்,பதிவுகள்,sooriyancomமற்றும் பல.
பி.கு சரியானவிதத்தில் சொல்லவந்ததை சொன்னேனா தெரியாது.குழப்பம் இருந்தால் பின்னூட்டுக.
10 Comments:
At 4:25 AM ,
Anonymous said...
அய்யா நல்லவே குழப்புகிறது. கொஞ்சம் விரிவாக எழுத முடியுமா?
At 4:31 AM ,
Luís F. Simões said...
Está aí uma escrita que não percebo patavina ;)
At 8:45 AM ,
Kasi Arumugam said...
சுரதா,
ஆமாம் :-) முழுமையாக சொல்லவந்ததை சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.
நான் முயற்சிக்கிறேன்:
செய்தியோடை (RSS) வசதி இல்லாத இணையத்தளங்கள் ஒரு மாற்று ஏற்பாடாக ப்ளாக்கர் மூலம் தங்கள் தளத்தின் செய்தியோடையைப் பதிப்பிக்க இயலும். கூடவே தளம் யுனிகோடாக இல்லாத போதும், இந்த 'கைப்பட'த் தயாரிக்கும் (manually created) செய்தியோடையில் தலைப்பையும் சில வரி முன்னோட்டத்தையும் யுனிகோடாக மாற்றிப் பதிப்பிப்பதன் மூலம் தங்கள் தளத்தின் புது வெளியீடுகளை இன்னும் பரவலாக எடுத்துச் செல்லல்லாம்.
ரொம்பக் குழப்பிட்டனோ:P
At 9:38 PM ,
ஈழநாதன்(Eelanathan) said...
சுரதா அண்ணா கொஞ்சம் குழப்பிவிட்டீர்கள் பின்னர் காசி அவர்களின் பதிவைப் பார்த்துத் தெளிந்தேன்.செய்தியோடை வசதியில்லாத இணையத் தளங்கள் தாங்களுக்கென்றொரு வலைப்பதிவை உருவாக்கி அதிலே தங்கள் இணையத்தளத்தில் புதுப்பிக்கப்பட்டும் விடயங்களுக்கான இணைப்பை கால ஒழுங்கில் எழுதவேண்டும்.அந்த வலைப்பதிவின் செய்தியோடைக்கான இணைப்பை தங்கள் தளத்தில் கொடுக்கவேண்டும்.இதன் மூலம் அவ்விணையத் தளத்துக்குச் செல்லாமலே புதுப்பிக்கப்படும் பதிவுகளை தெரிந்துகொள்ள முடியும் முடிந்தால் தமிழ்மணத்திலும் போடலாம்.
At 11:26 PM ,
Vijayakumar said...
அய்யோ என்னோட மரமண்டைக்கு உரைக்கவேயில்லை....இன்னும் கொஞ்சம் தெளிவா?
At 10:56 PM ,
suratha yarlvanan said...
அதிகம் எழுதினால் மேயர்கள் இன்னும் குழம்பிவிடுவார்கள் என நினைத்தேன்.:)
பரவாயில்லை கை கொடுக்க நண்பர்கள் இருக்கிறீர்கள் கவலை இல்லை.
பின்னூட்டத்திற்கு நன்றி
At 12:23 AM ,
Anonymous said...
ஓன்னும் புரிய வில்லை
At 12:47 AM ,
Anonymous said...
பின்னோட்டம் என்ற வார்த்தை செய்ற்கையாக அப்பட்டமான மொழி பெயர்ப்பக உள்ளது.வேறு நல்ல வார்த்தை யோசிக்கலாம்
At 12:23 AM ,
Anonymous said...
பின்னோட்டம் என்பது FEED BACK என்பதன் மொழி பெயர்ப்பானால் அதை
'பதில்-உரை' என்று மாற்றி பார்க்கலாமே
posted by: Ramaraj
At 7:43 AM ,
Anonymous said...
உனிகோட் எவ்வாறு நமது கணனியில்வேறு பகுதிக்கு எழுத்துரு மாறாமல் அனுப்புவது என்று தயவுசெய்து விளக்கவும்?
posted by: mathialagan
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home