ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Monday, January 28, 2008

எழுத்தாளர் செ.யோகநாதன் காலமானார்பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் காலமானார்
ஈழத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒரு வரான செ.யோகநாதன் தமது 66 ஆவது வயதில் நேற்றுக் காலமானார். இவர் தமிழ கத்திலும் நன்கு அறியப் பட்டவர்.
""கலைச்செல்வி'' பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 19601964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழு மத்தில் ஒருவர். பின்னர் தமிழக பத்திரி கைகளிலும் நிறைய எழுதியுள்ளார்.
இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி அவர் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த வேளையிலேயே வெளி வந்துவிட்டது.அதன் பின்னர் ""கண்ணீர் விட்டே வளர்த்தோம்'' உட்பட தமது சிறுகதைத் தொகுதிகள் சிலவற்றை வெளியிட்டார். தமது குறுநாவல்களையும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.
தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு அவர்களை தமிழக வாசகர்களுக்கு அறிமு கப்படுத்தியவர்.
இவரது படைப்புக்களுக்கு இலங் கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் பரி சில்களும்,விருதுகளும் கிடைத்தன.
குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய செ.யோ அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங் கினார்.
திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குநராகவும் செயற்பட்டார்.
கொழும்புத்துறையைப் பிறப்பிட மாகக் கொண்ட இவர் உதவி அரசாங்க அதிபராகவும் பணியாற்றியிருந்தார். (அ)

யோகநாதன் பற்றிய மேலதிக விபரங்கள்

http://uthayan.com

மேலதிக விபரம் குடும்ப தொடர்பு விபரத்துடன் இணைத்துள்ளேன்.


செல்லையா யோகநாதன்

(முன்னால் உதவி அரச அதிபர்பிரபல எழுத்தாளர்)
கொழும்புத்துறையை பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிட மாக வும் கொண்ட செல்லையா யோகநாதன் நேற்று (28.01.2008) திங்கட் கிழமை காலமானார்.
அன்னார் செல்லையா தம்பதியினரின் அன்பு மகனும், சிவராமலிங்கம் தம்பதியினரின் மருமகனும், சுந்தரலட்சுமி யின் அன்புக் கணவரும், Dr.சத்யன்(U.k), Dr. ஜெயபாரதி (கொழும்பு) ஆகியோரின் அன்பத்தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை (30.01.2008) புதன் கிழமை நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10 மணிக்குத் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
Information:
தகவல்:
குடும்பத்தினர்.
4/4,மூத்த விநாயகர் முதலாம் ஓழுங்கை,
கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்.
TP.021 222 7021

http://www.uthayanweb.com/Death_Notice_View.php?d=OB08012903

16 Comments:

 • At 12:00 AM , Blogger ஆடுமாடு said...

  தோழரே,
  அதிர்ச்சியாக இருக்கிறது. யோகநாதன் சென்னைக்கு வந்த காலத்தில் 'தாமரை'யில் இருவரும் சில நாட்கள் பணியாற்றியிருக்கிறோம். இலக்கிய விழாக்களில் சந்தித்து பேசியிருக்கிறேன். ஹார்ட் ஆபரேஷன் செய்த பிறகு இலங்கை சென்றார் என நினைக்கிறேன். அதன்பிறகு தொடர்பில்லை. அவரது படைப்புகளின் மூலமாக இனி அவரோடு வாழலாம் என நினைக்கிறேன்.
  தகவலுக்கு நன்றி.

   
 • At 1:11 AM , Blogger அய்யனார் said...

  அஞ்சலிகள்...
  மீண்டு வந்த சோளகம் எழுதியவரல்லவா?

   
 • At 1:12 AM , Blogger வசந்தன்(Vasanthan) said...

  அன்னாருக்கு எனது அஞ்சலி.

   
 • At 2:25 AM , Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

  மண்மணம் கமழ எழுதியவர். ஆத்மா சாந்தியடையட்டும்.

   
 • At 2:43 AM , Blogger suratha said...

  மேலதிக விபரம் குடும்ப தொடர்பு விபரத்துடன் புதிதாக இணைத்துள்ளேன்.

   
 • At 2:56 AM , Blogger -/பெயரிலி. said...

  இலங்கைத்தமிழ்ப்படைப்புலகுக்கு இழப்பு.

   
 • At 3:43 AM , Blogger மு. சுந்தரமூர்த்தி said...

  ஆரவாரமில்லாத ஆற்றொழுக்கு நடையில் எழுதப்பட்டவை அவரது கதைகள். செ. யோகநாதனின் கதைகளை வாசித்து தான் பல ஈழத்து வட்டார வழக்குச் சொற்களை தெரிந்து கொண்டது.

   
 • At 4:14 AM , Blogger Kanags said...

  மறைந்த எழுத்தாளருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

   
 • At 4:52 AM , Blogger தமிழ்நதி said...

  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

   
 • At 5:16 AM , Blogger oru Eelathu thamilan said...

  நண்பர் செ.யோ அவர்களின் பிரிவு அதிர்ச்சி அளிக்கின்றது. தமிழகத்தில் இருந்த காலத்தில் ஆக்கபூர்வமான பல பணிகளில் ஈடுபட்டவர். கலைஞர் எழுதிய பாயும் புலி பண்டாரவன்னியன் என்னும் இலங்கை வரலாற்று நாவலுக்கு ஆக்கபூர்வமான பல தகவல்களை சேகரித்து அளித்தவர். பாலு மகேந்திரா இயக்கிய வண்ண வண்ணப் பூக்கள் திரைப்படத்திலும் நிர்வாகப் பொறுப்புக்களைக் கவனித்தவர். அவர் எழுதிய நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே என்ற யாழ்ப்பாண சமூகம் சார்ந்த வரலாற்று நாவல் அவருக்கு புகழ் சேர்த்தது. சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கைப் பணி குறித்து அவர் எழுதிய இன்றும் கேட்கும் குரல் ஒரு பொக்கிசமாகும். மிருதுவான குரலில் இனிமையாக பேசும் நண்பர். இழப்பு வருத்தமளிக்கிறது.


  ஒரு ஈழத்துத் தமிழன்

  ஒரு ஈழத்துத் தமிழன்

   
 • At 5:28 AM , Blogger டிசே தமிழன் said...

  கவலை தரும் செய்தி :-(

   
 • At 5:49 AM , Blogger எம்.ரிஷான் ஷெரீப் said...

  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!

   
 • At 7:55 AM , Blogger டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

  அவரது இழப்பு ஈழத்து இலக்கியத்துறைக்கு பேரிழப்பாகும். அவரின் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

   
 • At 7:38 PM , Blogger விருபா / Viruba said...

  மறைந்த எழுத்தாளருக்கு எமது அஞ்சலிகள்

   
 • At 9:59 PM , Blogger suratha yarlvanan said...

  அஞ்சலி தெரிவித்த நண்பர்களுக்கும் மற்றும் யோகநாதன் நினைவை தனிஅஞ்சல் மூலம் பகிர்ந்துகொண்ட மாலனுக்கும் நன்றி.

  இப் பகிர்வுகள் அன்னாரது குடும்பத்திற்கு உதயன் பத்திரிகை தொடர்பு மூலம் தெரியப்படுத்துகிறேன்.


  நன்றி.

   
 • At 1:06 AM , Blogger கானா பிரபா said...

  அதிர்ச்சியோடு என் அஞ்சலிகளையும் பகிர்கின்றேன்.

   

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Create a Link

<< Home