ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Friday, April 22, 2005

முத்துக்குளிக்க வாரீகளா?

கூகுளித்து முத்தெடுத்திருப்பீர்கள்.இது வேறு...உள்ளதை வைத்து தமிழில் புதிதாக ஒரு மாபெரும் தேடி இயந்திரம் உருவாக்கியுள்ளேன்.
இந்த தொழில் நுட்பத்தை பாவித்து இனி தள நிர்வாகிகள்கூட தமது தளத்துக்கு ஒரு தேடியை உருவாக்கலாம்.


இந்தப் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக (Favorit)ஆக்கிக்கொள்ளுங்கள்.செய்திகளாகவிருந்தாலென்ன இலக்கிய அரசயல் கூற்றாகவிருந்தாலென்ன தேடி அறிந்துகொள்ள மிகவும் உதவும்..

இதன் தொடுப்பு இங்கே http://www.suratha.com/search.htm


இனிமேல் இணையத்தில் தமிழ்த்தேடிஎன்பது புதிதாக தேவையில்லை என்பது தமிழிணையத்தின் பயணரான, பயனரான எனது அனுபவத்தில் உள்ள உண்மை.

எனவே அரசுகளோ தனியார்வலர்களோ இதற்குள் பணத்தையும் நேரத்தையும் சிந்தாமல் தமிழில் மிக முக்கியமாக உடனடியாகத் தேவைப்படும் செயலியான எழுத்து உணர்ந்து பேசும் செயலியொன்றை தயாரித்துவெளியிட்டேயார்களானால் விழிப்புலனற்ற எத்தனையோ தமிழர்கள் இதனால் பயனுறுவர்.இந்த செயலியே தமிழ்க்கணனிப் பாதையிலே ஒரு மைல்கல்லாகவும் அமையும்.


அன்புடன்
சுரதா
suratha hotmail.com

Wednesday, April 13, 2005

புத்தாண்டுப்புண்ணியம்

புத்தாண்டு செய்தியாக திரு மாறனின் தமிழ்ச்செயலிகளின் கூட்டு பொதியொன்று இலவசமாக வெளியிடப்படுகிறதாக செய்தி வந்துள்ளது.
நேற்று திரு அலெக்ஸ் பாண்டியனின் பதிவில் இதுபற்றி எழுதியிருந்தார்.இப்போது இன்னமும் இது பற்றி விளக்கமாக விகடன் எழுதியுள்ளது.இந்தக் கட்டுரை ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் ஊட்டுகிறது.

இந்த மின் தகட்டை பெற்றுக்கொள்பவர்கள் எனக்கு ஒரு பிரதி தருவார்களேயானால் புண்ணியம் கிட்டும்.suratha@hotmail.com