ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Tuesday, May 17, 2005

காத்திருப்பேன் உனக்காக..

மற்றுமொரு பிரபல தமிழீழ செய்தித்தளம் புதினம் யூனிக்கோடுக்கு மாறியுள்ளது.ஒரு அரச ஆணையோ அல்லது ஒரு அரச பக்கபலமோ இல்லாது ஈழத்தமிழர்கள் யூனிக்கோடை ஏற்று தமது தளங்களைமாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

ஈழத்தின் பிரபல தினசரிகள் மூன்றும் (தினக்குரல் ,வீரகேசரி ஈழநாடு) யூனிக்கோடுக்கு மாறிவிட்டன..
தமிழ்நாட்டில் எங்கே பிரச்சனை எனத் தெரியவில்லை.வாழைப்பழத்தை உரித்துதீத்தி விடுமளவிற்கு செயலிகளையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கியிருக்கிறோம். அனைத்து உலக வலைப்பதிவாளர்களும் ஏன் என்று கேட்காமல் யூனிகோடை ஏற்றுக்கொண்டு அதில் வலைப்பதிவிடுகிறார்கள்.

திசைகள் துணிந்தளவிற்கு ஏன் இன்னமும் தமிழ் நாட்டின் ஒரு பத்திரிகையாவது துணியவில்லை...?
தந்தையர் நாடெனும் போதினிலே....
ஏக்கப்பெருமூச்சுத்தான் பிறக்கிறது:(

பி.கு சுஜாதா வாத்தியார் இது பற்றி கவனிக்கவே மாட்டாரா??