ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Friday, May 11, 2007

எழுநா -பின்னூட்டத்திரட்டி
ஒரே இடத்திலிருந்து அனைவரது பதிவுகளிற்கும் வரும் பின்னூட்டங்களை
பார்வையிடலாம்.

தமிழ்மணத்துக்கோ தேன்கூட்டுக்கோ பாதிப்பில்லை.

பட்டை(Badge) தாரை தம்பட்டை ஒன்றும் உங்கள் பக்கத்தில் சேர்க்கத்தேவையில்லை .

கூகிள் ஆண்டவரே திரட்டுவதால் யார் வந்தார்கள் யார் போனார்கள் என்ற ஒரு
விபரமும் யாருக்கும் தெரியவராது.

அடி முடி தேடுவதுபொல் கடந்தகாலப்பின்னூட்டங்களையும் பின் வரிசையாகச்சென்று தேடலாம்.

தமிழ்மணத்திலோ அல்லது தேன்கூட்டிலோ அல்லது இரண்டிலும் இணைந்தவர்களோ இணையாதவர்களோ தமது பதிவின் பினனூட்ட திரட்டியை இதில் பார்க்கலாம்.

பலவீனம்
கூகிள் மூலம் இயங்கப்பண்ணுவதால் அது 5 நிமிடத்திற்கோ அல்லது அரை
மணித்தியால இடைவெளியிலோ திரட்டுவதைத்தான் பார்த்துக்கொள்ளமுடியும்.

பின்னூட்ட திரட்டி வசதி கொண்ட வலைப்பதிவுகளை மட்டும்தான் இதில் சேர்க்கமுடியும்.உதாரணமாக புதிய புளொக்கர் கணக்கு; வேர்ட்பிறஸ் போன்றவை.

தங்களது பின்னூட்டம் திரட்டப்படவில்லை என கருதுபவர்கள் பின்னூட்டத்தில் தங்கள்
தள முகவரியை கொடுக்கவும்.சேர்த்துக்கொள்வேன்.


இது உங்களுக்கு பயன்படுமாயின் இதற்கு ஒரு தொடுப்பு உங்கள் பக்கத்தில் தெரிவித்து மற்ற புதியவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

பி.கு
எழுநா என்ற தனது இணையத்தள பெயரை பாவிக்க அனுமதி தந்த சயந்தனுக்கு நன்றி.எழுநா -பின்னூட்டத்திரட்டி