ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Wednesday, January 26, 2005

தந்திரமாவது நீறு

RSS/XML அல்லது ஓடை என்பவற்றை உருவாக்கி அதனை மிக இலகுவாக எப்படி பாவனைக்கு விடுவது?இந்த RSS அடக்குவதற்கு சில சட்டதிட்டங்கள் உண்டு.அதனை அறிந்தால் அதன்பின்னர் சேமிப்பில்ஏற்ற சொந்த வழங்கி தேவை...இவையொன்றும் இல்லாமல் மிகச்சுலபமாக இதுபற்றி அறிந்திராத எவரும் இதனை தங்களது கட்டுக்குள் கொண்டுவரலாம்.


1.ஏதாவது ஒரு Blogger கணக்கு ஆரம்பியுங்கள்(உதாரணம் thinnai)

2.


3.அதன்பின் title கீழ் உள்ள பெட்டியில் (body) அந்த நிஜமான போகி என்ற கட்டுரை அல்லது கவிதை சொல்லும் முதல் பகுதியை சேர்க்கவேண்டும்.

4.இனி வழமைபோல் Publish Post என்பதை அழுத்த காரியம் முடிந்தது.அவ்வளவுதான்.


இப்படி ஒரு தலையங்கத்திற்கு செய்ததுபோல மற்றைய முக்கிய தலையங்கங்களுக்கும் இதே முறையில் செய்ய சரி.

5.உங்கள் RSS முகவரி அதன் பின் இப்படி தோற்றமளிக்கும

http://உதாரணம்.blogspot.com/atom.xml


இதே போல் ஒரு இலக்கியதளத்தின் முக்கிய பகுதிகளை யாராவது சேவை நோக்கில் செய்தால் தமிழுக்கும் யூனிக்கோட்டுக்கும் புண்ணியம் உண்டாகும்.


எதிர்பார்க்கப்படும் தளங்களின் rss ஓடைகள்

திண்ணை,தற்ஸ்ரமில்கொம்,புதினம்,பதிவுகள்,sooriyancomமற்றும் பல.


பி.கு சரியானவிதத்தில் சொல்லவந்ததை சொன்னேனா தெரியாது.குழப்பம் இருந்தால் பின்னூட்டுக.


Sunday, January 16, 2005

எம்.ஜி.ஆரும் ஒரு பாமர இரசிகனும்.

Thursday, January 06, 2005

மணி கட்டினால் நல்லது.


ஈழத்திலிருந்து இன்னொரு தினசரி பத்திரிகையின் (தினக்குரல்) இணையத்தளம் யூனிகோட் எழுத்துரு கொண்டு இவ்வருட ஆரம்பத்திலிருந்து வெளி வருகிறது.

ஏற்கனவே ஈழத்திலிருந்து
வீரகேசரி, நமது ஈழநாடு பத்திரிகை தளங்கள் யுனிகோட்டிற்கு மாறியதை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

தினக்குரல் பத்திரிகை முன்னர் மாறுவதில்
ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து மயூரன் முன்னர் ஒருமுறை தனது பதிவில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

எனது கருத்து:-

யூனிகோட் முறைமையில் தளங்கள் வெளிவருவது மகிழ்ச்சியாகவிருந்தாலும் தளங்கள் தம்மை
கூகிள் போன்ற தேடிகள் வசம் அகப்பட செய்தல்வேண்டும்..அப்போதுதான் இதன் முழுப்பயனையும் பெறலாம்.

தமிழகப்பத்திரிகைகளுக்கும் யாராவது மணி கட்டினால் நல்லது.


suratha
http://www.suratha.com