ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Sunday, May 04, 2008

திக்கு தெரியாத காட்டில் -தமிழ்மணம் ஒரு பார்வை


தமிழ்மண வலைப்பதிவு திரட்டி பதிவுகளை திரட்டுவது மட்டுமல்லாது அதற்கப்பால் வலைப்பதிவை பிரபலமாக்குதல் எளிதாக்குதல் பதிவர் ஒருவரின் இடுகையின் ஆயுட்காலத்தை நீடித்தல் எனறு இயங்கவதால் பதிவர்கள் வலைப்பதிவை அடிக்கடி பதிய தூண்டுதலாகவிருக்கிறது.

இந்த விடயத்தில் இந்திய மொழிகளில் மட்டுமல்லாது மற்றைய எல்லா மொழிகளை விட தமிழில் அதிகமாகவே பதிவதற்கும் திரட்டுவதற்கும் தமது பதிவை மற்றோர் முன் கொண்டுசெல்லவும் நிறைய வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூட சொல்லலாம்.

தமிழ்வலைப்பதிவை முன்னோக்கி நகர்த்திய பெருமை தமிழ்மணத்திற்கு(காசி) உண்டு.
அதை தேங்க விடாமல் தொடர்ச்சியாக நகர்த்திகொண்டிருக்கும் நகர்த்திகொண்டிருந்த தமிழ்மண நிர்வாகத்தினர் மறறும் வலைப்பதிவு பட்டறை, பதிவா் சந்திப்புகள, மாற்று திரட்டிகள் என இயங்கிக்கொண்டிருக்கும் அனைவரும் நன்றிக்குரியவர்களே.

தமிழ்மணத்தின் புதியவடிவம் வளர்ந்துவரும் புதிய பல தொழில்நுட்பங்களை உள்வாங்கி வெளிவந்துள்ளது.

இதன் பின்னாலுள்ள கடினஉழைப்பு செலவிடப்பட்ட நேரம் மற்றோர் ஒத்துழைப்பு வித்தியாசமான சிந்தனை யாவும் புரிதலுக்கப்பால் அசத்துகிறது.


இந்தபுதிய வடிவத்தில் எனக்கு பிடித்த சில அம்சங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


வழக்கம்போல் சூடான இடுகைகள் மீண்டும் தமிழ்மணத்தில் இடம்பெற்றிருப்பது

பின்னுாட்டங்களால் மடடும் வாழும் இடுகைகள் பின்னுாட்டமில்லாவிடினம் சூடான இடுகை மூலம் மேலும் பலரது கவனத்திற்குட்படுகிறது.ஒரு சில இடறல்களுக்காக முன்னர் அந்தப்பகுதியையே எடுத்திருந்தார்கள் என நினைக்கிறேன்..

அதே போல் மிக முக்கியமாக

இன்றைய பதிவர்கள் பகுதி...
புதிய இடுகைகள் முற்பகுதியில் பதிவுகளின் ஓட்டத்தில் காணாமல்போனாலும் நமக்கு தெரிந்த ஒரு பதிவரின் பதிவு இன்று வந்திருக்கிறது என்றுஅறிந்துஅதனை பார்க்க இது ஒரு வசதி.

மிகவும் பிரயோசனமான பகுதி.

அடுத்தது கேளிர் திரட்டி

தமிழ்மணத்தின் முன்பக்கத்தலேயே கேளிர் திரட்டி இடம்பிடித்தது.
தமிழ்மணத்தில் இன்னபிறகாரணங்களுக்காக இணையாதோரின் வலைப்பக்கம் கூட இதில் காட்டப்படுவதால் அந்தப்பதிவுகளைகூட தமிழ்மணத்திற்கு வரும் வாசகர்கள் தவறவிடாது படிக்கும் சந்தர்ப்பம் உண்டாகிறதுஇதில் காட்டப்படும் தொகை‌ 5 லிருந்து 10 ஆக அதிகரி த்தால் நன்று.

பதிவா்களுக்கு அவா்தம் முயற்சிகளை ஊக்குவித்து முதல்பக்கத்தில் விளம்பரப்படுத்தவது,
தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் ஒரு பதிவரின் வலைப்பக்கம் போகாமல் அவ்வலைப்பதிவாின் இடுகையை தமிழ்மண முதறபக்கத்தில் இருந்துகெண்டே pdf மூலம் படிக்குமு் வசதி
போன்றவை மேலும் குறிப்பிடக்கூடிய சில சிறப்பம்சங்கள்.

எங்கு போவது எதை பார்ப்பது எதை விடுவது என்பது இனி குழப்பமாகவிருக்ப்போகிறது.

மொத்தத்தில் தமிழ்மணத்தில் செலவிடும் நேரம் இனி அதிகரிக்கப்போகிறது.

விசேட பாராட்டுக்கள் சசி

Labels: , ,

Monday, January 28, 2008

எழுத்தாளர் செ.யோகநாதன் காலமானார்பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் காலமானார்
ஈழத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒரு வரான செ.யோகநாதன் தமது 66 ஆவது வயதில் நேற்றுக் காலமானார். இவர் தமிழ கத்திலும் நன்கு அறியப் பட்டவர்.
""கலைச்செல்வி'' பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 19601964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழு மத்தில் ஒருவர். பின்னர் தமிழக பத்திரி கைகளிலும் நிறைய எழுதியுள்ளார்.
இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி அவர் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த வேளையிலேயே வெளி வந்துவிட்டது.அதன் பின்னர் ""கண்ணீர் விட்டே வளர்த்தோம்'' உட்பட தமது சிறுகதைத் தொகுதிகள் சிலவற்றை வெளியிட்டார். தமது குறுநாவல்களையும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.
தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு அவர்களை தமிழக வாசகர்களுக்கு அறிமு கப்படுத்தியவர்.
இவரது படைப்புக்களுக்கு இலங் கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் பரி சில்களும்,விருதுகளும் கிடைத்தன.
குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய செ.யோ அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங் கினார்.
திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குநராகவும் செயற்பட்டார்.
கொழும்புத்துறையைப் பிறப்பிட மாகக் கொண்ட இவர் உதவி அரசாங்க அதிபராகவும் பணியாற்றியிருந்தார். (அ)

யோகநாதன் பற்றிய மேலதிக விபரங்கள்

http://uthayan.com

மேலதிக விபரம் குடும்ப தொடர்பு விபரத்துடன் இணைத்துள்ளேன்.


செல்லையா யோகநாதன்

(முன்னால் உதவி அரச அதிபர்பிரபல எழுத்தாளர்)
கொழும்புத்துறையை பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிட மாக வும் கொண்ட செல்லையா யோகநாதன் நேற்று (28.01.2008) திங்கட் கிழமை காலமானார்.
அன்னார் செல்லையா தம்பதியினரின் அன்பு மகனும், சிவராமலிங்கம் தம்பதியினரின் மருமகனும், சுந்தரலட்சுமி யின் அன்புக் கணவரும், Dr.சத்யன்(U.k), Dr. ஜெயபாரதி (கொழும்பு) ஆகியோரின் அன்பத்தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை (30.01.2008) புதன் கிழமை நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10 மணிக்குத் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
Information:
தகவல்:
குடும்பத்தினர்.
4/4,மூத்த விநாயகர் முதலாம் ஓழுங்கை,
கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்.
TP.021 222 7021

http://www.uthayanweb.com/Death_Notice_View.php?d=OB08012903