தந்திரமாவது நீறு
RSS/XML அல்லது ஓடை என்பவற்றை உருவாக்கி அதனை மிக இலகுவாக எப்படி பாவனைக்கு விடுவது?இந்த RSS அடக்குவதற்கு சில சட்டதிட்டங்கள் உண்டு.அதனை அறிந்தால் அதன்பின்னர் சேமிப்பில்ஏற்ற சொந்த வழங்கி தேவை...இவையொன்றும் இல்லாமல் மிகச்சுலபமாக இதுபற்றி அறிந்திராத எவரும் இதனை தங்களது கட்டுக்குள் கொண்டுவரலாம்.
1.ஏதாவது ஒரு Blogger கணக்கு ஆரம்பியுங்கள்(உதாரணம் thinnai)
2.

3.அதன்பின் title கீழ் உள்ள பெட்டியில் (body) அந்த நிஜமான போகி என்ற கட்டுரை அல்லது கவிதை சொல்லும் முதல் பகுதியை சேர்க்கவேண்டும்.
4.இனி வழமைபோல் Publish Post என்பதை அழுத்த காரியம் முடிந்தது.அவ்வளவுதான்.
இப்படி ஒரு தலையங்கத்திற்கு செய்ததுபோல மற்றைய முக்கிய தலையங்கங்களுக்கும் இதே முறையில் செய்ய சரி.
5.உங்கள் RSS முகவரி அதன் பின் இப்படி தோற்றமளிக்கும
http://உதாரணம்.blogspot.com/atom.xml
இதே போல் ஒரு இலக்கியதளத்தின் முக்கிய பகுதிகளை யாராவது சேவை நோக்கில் செய்தால் தமிழுக்கும் யூனிக்கோட்டுக்கும் புண்ணியம் உண்டாகும்.
எதிர்பார்க்கப்படும் தளங்களின் rss ஓடைகள்
திண்ணை,தற்ஸ்ரமில்கொம்,புதினம்,பதிவுகள்,sooriyancomமற்றும் பல.
பி.கு சரியானவிதத்தில் சொல்லவந்ததை சொன்னேனா தெரியாது.குழப்பம் இருந்தால் பின்னூட்டுக.